மதிப்பெண்கள் குறைந்த விரக்தியில் பிளஸ் 2 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்துக்குள்பட்ட லளிகம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியண்ணன். கட்டடத் தொழிலாளியான இவர், பெங்களூரில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்லம்மாள்.
இவர்களது மகள் சந்தியா (17), பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்தார். தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியானது. இதில், 701 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார் சந்தியா. ஆனால், அவர் அதிக மதிப்பெண்கள் பெறுவோம் என்று நம்பியிருந்தாராம். கூடுதல் மதிப்பெண்கள் கிடைத்தால் நர்சிங் கல்லூரியில் சேர்ந்து பயில முடியும் என நினைத்திருந்தார்.
ஆனால், குறைவான மதிப்பெண்கள் கிடைத்திருப்பதால் தன்னால் விரும்பிய படிப்பில் சேர முடியாது என்ற விரக்தியில் வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அருகிலிருந்தோர் விரைந்து வந்து சந்தியாவை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து அதியமான்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாததற்கான காரணம் இதுதான்: தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளர்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

திரையரங்குகளில் தினசரி 5 காட்சிகளுக்கு அனுமதி! - முதல்வர் விஜய் உத்தரவு

ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் இணைந்தனர்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


