இன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

தாற்காலிக ஆசிரியர் பணியிடங்களைநிரந்தரப்படுத்த வலியுறுத்தல்

தாற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் வலியுறுத்தியுள்ளது.

Updated On :

தாற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் வலியுறுத்தியுள்ளது.

தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அந்தச் சங்கத்தின் மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம், மாவட்டத் தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. மாநில செய்தித் தொடர்பாளர் ஆர்.செல்வம் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் சேகர், மண்டல செயலர் டி.செல்வம், மாவட்ட அமைப்பு செயலர் கே.அருண்குமார், மாவட்ட மகளிரணிச் செயலர் எஸ்.ஞானசிகாமணி ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில், நிகழ் கல்வியாண்டில் (2015-16) தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியலை விரைவில் வெளியிட வேண்டும். கூடுதலாக உருவாக்கப்படும் பணிடங்களை முறையான கலந்தாய்வின் மூலம் நிரப்ப வேண்டும். அனைத்து தாற்காலிக பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் தலைமையிடச் செயலர் எம். முருகன், மாவட்டத் துணைத் தலைவர் க.காவேரி, செய்தித் தொடர்பாளர் ஜி.ஆரோக்கியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.