ஆசிய பாரா விளையாட்டு: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்!

வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

 தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை (செப்.15) வெளியிடப்படுகிறது.

Updated On :

 தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை (செப்.15) வெளியிடப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப்பணி மேற்கொள்வதன் பொருட்டு வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்டத் தேர்தல் அலுவலரான ஆட்சியரால் வெளியிடப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, வரும் அக்டோபர் 14-ஆம் தேதி வரை அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், பிழைத் திருத்தம், முகவரி மாற்றத்துக்கான விண்ணப்பங்கள் வாக்குச்சாவடி மையங்களில் நிர்ணயிக்கப்பட்ட நிலை அலுவலர்களால் பெறப்படும்.

அடுத்தாண்டு ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள் அதாவது 1997-ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அன்றோ, அதற்கு முன்னர் பிறந்தவர்கள் படிவம் 6-ஐ நிறைவு செய்து வயது, இருப்பிடத்துக்கான ஆதாரத்துடன் விண்ணப்பிக்கலாம்.

வரும் புதன் (செப்.16) மற்றும் செப்டம்பர் 30ஆம் தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு கிராமசபைக் கூட்டம் மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளிலும் நடைபெறும். இதில் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளின் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

இதுதவிர, செப்டம்பர் 20, அக்டோபர் 4- ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை நாள்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.

அதேபோல, மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 59 கணினி மையங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.