மானுட வரலாற்றை மாற்றியமைப்பது குறித்து பேசவும், எழுதவும் வேண்டும் என்றார் எழுத்தாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பாலபாரதி.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தருமபுரி மாவட்டக் கிளை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற படைப்பிலக்கியக் கலந்துரையாடலில் தனது "சில பொய்களும் சில உண்மைகளும்' என்ற கவிதை நூல் குறித்து அவர் மேலும் பேசியது:
நம்முடைய வீதிகளில் துப்புரவுப் பணியாளர்கள் காலை 5 மணிக்கெல்லாம் பணிக்கு வந்துவிடுகிறார்கள். அந்த வேலையை அவர்களிடம் திணித்தது யார்? காலையில் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பணிகளை அவர்கள் வீட்டில் யார் செய்வார்கள்? எத்தனை அறிவியல் வளர்ச்சி பெற்றும் இந்தத் துயரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறதே?
எத்தனை அரசியல் இயக்கங்கள் வளர்ந்து வந்தாலும்கூட சாதிப் பிரிவினைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. புதிதாக உருவாகி வருவோர் கவனமாக சாதிப் பிரிவினை குறித்து வாய் திறக்காமல் மெளனமாகிவிடுகின்றனர்.
சாதி, மத மோதல்கள் அனைத்திலும் உடனடியாகப் பாதிக்கப்படுவது பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.
சட்டப்பேரவையிலும்கூட ஒரு காலத்தில் ஆதிதிராவிடர் நல மானியக் கோரிக்கை தனியாக நடக்காது. காவல் துறை மானியக் கோரிக்கை இரு நாள்கள் நடைபெறும்.
நேரம் குறையும், பெட்ரோல்- டீசல் தேவை குறையும் என்று சொல்லித்தான் நாற்கரச் சாலைகளைக் கொண்டு வந்தார்கள். ஆனால், வேகமாகப் போய் சுங்கச்சாவடியில் வரிசையில் நிற்கிறோம். எரிபொருளால் மிச்சமான காசை சுங்கச்சாவடியில் கொடுக்கிறோம். அதேநேரத்தில் நாற்கரச் சாலைகளுக்காக பிளவுண்ட கிராமங்கள் எத்தனை? வெட்டப்பட்ட மரங்கள் எத்தனை? இவற்றை மீண்டும் தர முடியுமா?
கடந்த 15 ஆண்டுகளில் நடைபெற்ற போராட்டங்கள் எண்ணிக்கையும், அண்மைக்காலமாக இரு ஆண்டுகளில் நடைபெற்ற போராட்டங்களின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்கிறது. முன்பைவிடவும் போராட்ட மாதிரிகள் மாறி இருக்கின்றன.
30 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறவில்லை. மக்கள்தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்கள், மக்களவையும், மாநிலங்களவையிலும், சட்டப்பேரவைகளிலும் வெறும் 6 முதல் 7 சதவீதமாகவே உள்ளனர்.
எனவே, படைப்பாளிகளும், வாசகர்களும் எதைப் படிப்பது, எதைப் பேசுவது என்பது குறித்து தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டியுள்ளது. மானுட வரலாற்றை மாற்றியமைப்பது குறித்து பேசவும், எழுதவும் வேண்டும். பிரச்னைகளைத் தீர்க்க சிந்திக்க வேண்டும் என்றார் பாலபாரதி.
கூட்டத்துக்கு, கோ. சுகதேவ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சுஷீல்குமார் ஒருங்கிணைத்தார். மாவட்டத் தலைவர் கவிதா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செல்வப்பெருந்தகை சிறைபிடிப்பு! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!

வருமான வரித்துறை அதிகாரிகளால் சிறைப்பிடிப்பு: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு!
திருட மட்டும்தான் தெரியும்... கர டிரைலர்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

