தருமபுரியில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட அரிசி மூட்டைகள் சேதமடைந்திருந்ததால், வழியெங்கும் பொதுவிநியோகத் திட்ட அரிசி கொட்டி வீணாகியது.
தருமபுரி பாரதிபுரத்தில் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் உள்ளது. இக்கிடங்கில் பொதுவிநியோகத் திட்டத்துக்கு அனுப்பப்படும் அரிசி மூட்டைகள் சேமித்துவைக்கப்பட்டு, அங்கிருந்து நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குக்கு அனுப்பப்படும். பின்னர், அக்கிடங்கிலிருந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக்கடைகளுக்கு அரிசி மூட்டைகள் அனுப்பி வைக்கப்படும்.
இந்த நிலையில், திங்கள்கிழமை தருமபுரி ரயில் நிலையத்துக்கு சரக்கு ரயில் மூலம் வந்த அரிசி மூட்டைகளை இறக்கி, லாரிகளில் பாரதிபுரத்தில் உள்ள தமிழ்நாடு சேமிப்புக் கிடங்குக்கு எடுத்துச் சென்றனர். அப்போது, ரயில் நிலையத்திலிருந்து கிடங்குக்கு சென்ற இரண்டு லாரிகளிலிருந்த மூட்டைகள் சேதமடைந்திருந்ததால் அதிலிருந்து அரிசி சாலையில் கொட்டியது. மேலும், லாரியின் பின்னால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் முகத்திலும் அரிசி தெரித்து விழுந்தது.வழிவெடுகிலும் கிடங்கு வரை சுமார் 2 கி.மீ. தொலைவு வரை அரிசி கொட்டி வீணாகியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மணிப்பூரில் களமிறங்கும் கோப்ரா கமாண்டோக்கள்: மத்திய அரசு அதிரடி
பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான மிகை லாபத் தடுப்பு வரி குறைப்பு: இன்றுமுதல் அமல்

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் நீதித் துறையுடன் மோதல் இல்லை: சட்ட அமைச்சா்

காஞ்சிபுரம் அருகே குடிநீா் வராததால் பொதுமக்கள் சாலை மறியல்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


