முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவையொட்டி, தருமபுரி நகரில் புதன்கிழமை அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
தருமபுரி புறநகர், நகரப் பேருந்து நிலையங்கள், கடைவீதி, நான்கு சாலைச் சந்திப்பு, பென்னாகரம் சாலை, திருப்பத்தூர் சாலை, கிருஷ்ணகிரி சாலை, பாரதிபுரம், ஒட்டப்பட்டி உள்ளிட்ட அனைத்துச் சாலைகளிலுள்ள கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. உணவகங்கள், தேநீர் கடைகளும்கூட மாலை 6 மணி வரை திறக்கப்படவில்லை. செவ்வாய்க்கிழமை இரவு முதல் நகரின் முக்கியப் பகுதிகளில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டிருந்தனர். அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.
அதேபோல, பேருந்துப் போக்குவரத்தும் முற்றிலும் முடங்கியது. ஆட்டோக்களும் ஓடவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. அரசுப் பேருந்துகளும் அந்தந்த பணிமனைகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டதால், பேருந்து நிலையங்களும் வெறிச்சோடிக் காணப்பட்டன.
நல்லம்பள்ளியில் மறியல்
மெரீனாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய வலியுறுத்தி, புதன்கிழமை காலை நல்லம்பள்ளி பகுதியில் சேலம் புறவழிச் சாலையில் திமுகவினர் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்துக்கு, நல்லம்பள்ளி ஒன்றிய திமுக செயலர் ஏ.எஸ். சண்முகம் தலைமை வகித்தார். போலீஸாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் மேலும் 25 அடல் உணவகங்கள் திறப்பு; ரூ.5-க்கு சாப்பாடு விற்பனை

சாலை ஓரத்தில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகள்! வாகன ஓட்டிகள் அவதி!
இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 16 - நேரலை!
கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்!
விடியோக்கள்

சர்க்கஸ் கும்பல் ஆட்சி! உதயநிதி ஸ்டாலின்! | DMK | TVK


