தருமபுரி மாவட்டத்தில் சுதந்திர தின விழா பல்வேறு கல்வி நிறுவனங்களில் உற்சாகமாக புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
தருமபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பெ.பழினிசாமி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தருமபுரி அரசினர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரியின் முதல்வர் மு.இல.வளர்மதி, தேசியக் கொடியை ஏற்றினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தங்க காசு பரிசளிப்பு: நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பேடரஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர் எம்.பாலாஜியை பாராட்டி, உடல் கல்வி ஆசிரியர் இரா.தமிழரசன் 2 கிராம் தங்க காசை பரிசாக வழங்கினார். 100 சதவீத தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கு
பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளியின் தலைமையாசிரியர் ஆர்.தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பள்ளிக்கு நிலம் வழங்கியவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.சிவசக்தி, உறுப்பினர் பெருமாள் உள்ளிட்டோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.
தருமபுரி, அன்னசாகரம் நகராட்சி நடுநிலைப் பள்ளயில் நடைபெற்ற விழாவுக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர் ஏ.பி.நரசிம்மன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். பள்ளியின் தலைமையாசிரியர் கு.விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற விழாவில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மகாத்மா காந்தி நற்பணி மன்ற மனித வள மேம்பாட்டுத் தலைவர் பி.பரமேஸ்வரன் பரிசுகளை வழங்கினார்.
மாரவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளியின் மேலாண்மைக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி, கிராமக் கல்விக் குழுத் தலைவர் ஆனந்தன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் துரைசாமி, பள்ளியின் தலைமையாசிரியர் ஆர்.சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நல்லம்பள்ளி அருகே புக்கம்பட்டியான் காட்டுவளவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தலைமை ஆசிரியர் கோ.முனிரத்தினம் வரவேற்றார்.
செட்டிக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பள்ளகொல்லஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற விழாவுக்கு தருமபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் டி.கே.ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
பென்னாகரம் அருகே சின்னப்பளத்தூர் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வி.மாதன் தேசியக் கொடி ஏற்றினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

”இனி நீங்க கனவு கண்டாலும் ஆட்சிக்கு வர முடியாது..!” பேரவையில் அமைச்சர் ஆனந்த் ஆவேசம்! | TVK

எதுக்கு கோவமா பேசுறீங்க? இது சட்டமன்றம்-ங்க! பேரவையில் திடீர் சலசலப்பு! | TVK | DMK | ADMK

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம்: சீமான்

லீமா ரோஸ், உதயநிதி, ஆதவ் ஏழைகளா? ஆடம்பரத்துக்கு மக்கள் பணமா? நடிகை கஸ்தூரி கண்டனம்!
விடியோக்கள்

எதுக்கு கோவமா பேசுறீங்க? இது சட்டமன்றம்-ங்க! பேரவையில் திடீர் சலசலப்பு! | TVK | DMK | ADMK


