தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர்  தீக்குளிக்க முயற்சி

சொத்துத் தகராறில் தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தருமபுரி மாவட்ட ஆட்சியர்

Updated On :25 டிசம்பர் 2018, 8:37 am IST

சொத்துத் தகராறில் தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் திங்கள்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியது. 
தருமபுரி மாவட்டம்,  பென்னாகரம் வட்டம், வட்டுவனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கலா (58). இவரது கணவர் மட்டி(எ) இருளப்பன். இவர்களுக்கு சொந்தமான இடம் குறித்து உறவினர்களுக்கு இடையே முன்விரோதம் உள்ளது. இந்த நிலையில், கலாவுக்கு சொந்தமான கிணறு, மின் மோட்டாரை அவரது உறவினர்கள் சேதப்படுத்தி கொலை செய்ய முயன்றனராம். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கலா, இருளப்பன், மகன் ராஜரத்தினம் (45), மருமகள் மாயா(42),  பேத்தி, பேரன் உள்ளிட்ட 6 பேர் தருமபுரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றனர். அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.