எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

பாரத மாதா ஆலயத்தை சமத்துவ பொதுக் கோயிலாக விரைவில் கட்ட வேண்டும்: குமரி அனந்தன் வேண்டுகோள்

பாப்பாரப்பட்டியில் அமைக்கப்படவுள்ள பாரத மாதா ஆலயத்தை சமத்துவ பொதுக் கோயிலாக விரைவில் கட்டி எழுப்ப வேண்டும் என

Updated On :23 ஜூலை 2018, 9:26 am IST

பாப்பாரப்பட்டியில் அமைக்கப்படவுள்ள பாரத மாதா ஆலயத்தை சமத்துவ பொதுக் கோயிலாக விரைவில் கட்டி எழுப்ப வேண்டும் என  மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். 
தருமபுரி பாரத மாதா ஆன்மிக சேவை மையம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் அவர் பேசியது:
தியாகி சுப்பிரமணிய சிவா முதலில் மானாமதுரை பகுதியிலுள்ள பசலை கிராமத்திலும்,  பிறகு காரைக்குடி பகுதியிலுள்ள அமராவதிபுரத்திலும்தான் பாரத மாதா ஆலயத்தை அமைக்க விரும்பினார்.  அங்கு சாத்தியக்கூறுகள் அமையாததால்,  பிறகு, தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் ஆலயத்தை அமைக்க முடிவு செய்து,  இடத்தையும் வாங்கினார்.
தற்போது அரசே இந்த ஆலயத்தை அமைக்க முன்வந்திருப்பதால்,  வட  மாநிலத்தவர் மட்டுமின்றி,  உலகச் சுற்றுலாப் பயணிகளும் கூட பாப்பாரப்பட்டிக்கு வந்து செல்ல வாய்ப்பிருக்கிறது.  உலகமே வந்து "பார்ப்பார்'பட்டியாக இது மாற இருக்கிறது.
 பாரத மாதா ஆலயத்தில் அனைத்து மதத்தவரும்,  அனைத்துச் சாதியினரும் உள்ளே கருவறை வரை நுழைந்து பாரத மாதாவைத் தொட்டு வழிபட  வேண்டும் என்பதுதான் சுப்பிரமணிய சிவாவின் விருப்பம்.  அதன்படி,  கோயிலை அரசு வடிவமைக்க வேண்டும்.  கடவுளுக்கும் பக்தர்களுக்கும் இடையே சிபாரிசு செய்ய ஓர் ஆள் தேவையில்லை என்ற மகத்தான புரட்சியை முன்வைத்தவர் சுப்பிரமணிய சிவா.
தனது "ஞானபாநு' பதிப்பகத்தில் தமிழில் ஆங்கிலம் மற்றும் சம்ஸ்கிருத சொற்கள் கலக்காமல் படைப்புகளைத் தருவோருக்கு ரூ. 5 பரிசு வழங்கப்படும் என அப்போதே அறிவித்தவர் சிவா.
பாப்பாரப்பட்டியில் ஏழரை ஏக்கர் நிலத்தை வாங்கி பாரத ஆசிரமம் அமைத்த சிவா,  அதன் உறுப்பினர்களுக்கு மூன்று முக்கிய விதிமுறைகளை விதித்தார்.  புகைப் பிடிக்கக் கூடாது, மது அருந்தக்க கூடாது,  அடுப்பு மூட்டி சோறு சமைக்கக் கூடாது ஆகியவைதான் விதிமுறைகள்.  ஆசிரம உறுப்பினர்கள் வீதி வீதியாகச் சென்று மக்களிடம் யாசகம் எடுத்து சாப்பிட வேண்டும் என்றார்.
தொழுநோய் பாதித்த போதும் பாரத மாதா ஆலயம் என்னும் சமத்துவக் கோவில் கனவிலேயே இருந்து உயிரை விட்டவர் சுப்பிரமணிய சிவா.
எனவே,  அவரது கனவை நனவாக்கும் வகையில் அரசு அறிவித்துள்ள ஆலயத்தை விரைவில் தாமதமின்றி கட்ட வேண்டும்.  உலகமே வியந்து பார்க்கும் வகையில் அற்புதமாக அமைக்க வேண்டும்.  சிவாவே தயாரித்த களிமண்ணால் ஆன பாரத மாதா சிலை,  சின்னமுத்து முதலியாரின் பேரன் வீட்டில் உள்ளது.  அதனைப் பெற்று கண்ணாடிப் பெட்டகத்தில் வைத்து, ஆலயத்தின் ஒரு பகுதியில் வைக்க வேண்டும். 
சாதி, மத சமத்துவத் தத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒரு சிலையொன்றை வடிப்பதற்கு விற்பன்னர்களிடம் வரைபடங்கள் கேட்டு வாங்கி, அவற்றில் ஒன்றைத் தேர்வு செய்து, சிலை வடித்து கோயிலில் நிறுவ வேண்டும்.
தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 1.5 கோடி தொகை போதவில்லை என்றால்,  கூடுதல் தொகை சேர்த்துப் பெற்று ஆலயத்தை முடிப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் குமரி அனந்தன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.