தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திமுக தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பதவி: மே 19-இல் நேர்காணல்

தருமபுரி மாவட்ட திமுக தகவல் தொழிநுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பதவியிடங்களுக்கு வருகிற மே 19-இல் நேர்காணல் தொடங்குகிறது என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 மே 2018, 9:15 pm

DIN

தருமபுரி மாவட்ட திமுக தகவல் தொழிநுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பதவியிடங்களுக்கு வருகிற மே 19-இல் நேர்காணல் தொடங்குகிறது என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, திமுக மாவட்டச் செயலர் தடங்கம் பெ.சுப்ரமணி எம்.எல்.ஏ. திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தருமபுரி மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணிக்கு நகரம், ஒன்றியம், பேரூர், வார்டு, வாக்குச்சாவடி வாரியாக ஒருங்கிணைப்பாளர்களுக்கான நேர்காணல், மாவட்ட கட்சி அலுவலகத்தில் சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக நடைபெற உள்ளது. மே 19 அரூர் சட்டப் பேரவைத் தொகுதி, மே 20 பென்னாகரம் தொகுதி, மே 21 பாலக்கோடு தொகுதி, மே 22 பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி, மே 23 தருமபுரி தொகுதிக்கும் நேர்காணல் நடைபெற உள்ளன. எனவே, இப்பதவியிடங்களுக்கான விண்ணப்பதாரர்கள் தவறாமல் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தொடர்புக்கு: மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செ.ஜெகநாதன். செல்லிடப் பேசி எண் : 9442832466.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.