எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிவாடியில் பெட்ரோலிய நிலையத்துக்காக விவசாய நிலங்களை எடுப்பதை எதிர்த்து மனு அளிக்கும் போராட்டம்

தருமபுரி மாவட்டம் சிவாடியில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக விவசாயிகளின் நிலங்களை எடுப்பதை எதிர்த்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கும் போராட்டம்

Updated On :21 மே 2018, 10:48 pm

தருமபுரி மாவட்டம் சிவாடியில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக விவசாயிகளின் நிலங்களை எடுப்பதை எதிர்த்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.என். மல்லையன் தலைமை வகித்தார்.
மாநிலத் துணைத் தலைவர் டி. ரவீந்திரன், மாவட்டச் செயலர் எம். ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி. இளம்பரிதி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது
சிவாடியில் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையம் ரூ. 1,813 கோடியில் அமைக்கவுள்ளதாகவும், இதற்காக சிவாடியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் விவசாய நிலங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
பல ஆண்டுகளாக பாரம்பரியமாக வாழ்ந்து வரும் விவசாய நிலங்களை விட்டுவிட்டு, புறம்போக்கு நிலங்களை எடுக்கலாம். இதுகுறித்து விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும். விவசாயிகள் தங்கள் நிலங்களை எடுப்பதை எதிர்த்து ஏற்கெனவே ஆட்சேபனை மனுக்களை அளித்துள்ளார்கள். அவற்றைக் கவனத்தில் கொண்டு, விவசாய நிலங்களை எடுப்பதை நிறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி, இதுதொடர்பாக பதில் அளிப்பதற்கு 30 நாள்கள் அவகாசம் அளிக்கக் கேட்டுக் கொண்டார். அதுவரை விவசாயிகளுக்கு சொந்தமான நிலத்தில் அரசுத் துறையினர் யாரும் பணி செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.