தருமபுரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்ற 11 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
தருமபுரி நகரில் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்வதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில், தருமபுரி நகரக் காவல் ஆய்வாளர் ரத்தினகுமார், உதவி ஆய்வாளர் சுந்தரம், கிருஷ்ணவேணி உள்ளிட்டோர், ஆறுமுக ஆசாரி தெரு, கடைவீதி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். இச் சோதனையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப்பொருள்களை விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, புகையிலை பொருள்கள் விற்பனை
செய்த குமார்(34), மணிவண்ணன், ராஜேந்திரன்(58), சண்முகம்(40), ராமமூர்த்தி, ராஜேஸ்வரி(44) உள்பட 11 பேரை போலீஸார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய நரேஷ்குமார்(24) மற்றும் லால்ராம் செளத்ரி ஆகிய இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்காவின் தடைகளுக்கு இணங்கமாட்டோம்: சீனா

மேயோன் எரிமலை வெடிப்பு! சுற்றியுள்ள 6 கி.மீ. பகுதிகள் ஆபத்தானவையாக அறிவிப்பு! | Philippines
வெற்றிலை சர்பத்

குட்டித் தூக்கம் போடுபவர்களுக்காக போட்டி நடத்திய தென் கொரியா!
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

