அரூர் நகரின் மையப் பகுதியில் செல்லும் ராஜ கால்வாயை தூய்மை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
அரூர்-சேலம் நெடுஞ்சாலையில், எச்.தொட்டம்பட்டியில் அமைந்துள்ளது அரூர் பெரிய ஏரி. இந்த ஏரியானது சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்வதற்காக, அரூர் நகரில் ராஜ கால்வாய் உள்ளது.
இந்த கால்வாய் நகரின் மையப் பகுதியில் செல்கிறது. அரூரில் வெளியேறும் ஒட்டு மொத்தக் கழிவு நீரும் இந்த ராஜ கால்வாயில்தான் செல்கிறது.
இந்த கால்வாய் அமைந்துள்ள பகுதியில் சிலரின் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அதேபோல், கழிவு நீர் கால்வாய் தூர் அடைந்து முள்புதர்களுடன் உள்ளது.
மேலும், அரூர் பேருந்து நிலைய வளாகப் பகுதியில் உள்ள மீன், கோழி, ஆடு இறைச்சிக் கடைகளின் கழிவுகள் இந்த ராஜ கால்வாயில் கொட்டப்படுகின்றன. இதனால் கழிவு நீர் வெளியேறாமல் பல இடங்களில் குட்டைபோல் தேங்கியுள்ளது. நீண்ட நாள் கழிவு நீர் ஒரே இடத்தில் தேங்குவதால் கொசு உற்பத்தியும், நோய் பரவும் நிலையுள்ளது.
எனவே, அரூர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப் பணித் துறையினர் இணைந்து, அரூர் நகர் பகுதியில் செல்லும் ராஜ கால்வாயை தூய்மை செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்ஸ்டாவில் பழகி 14 வயது சிறுவனுடன் 40 வயது பெண்மணி திருமணம்! -போலீஸில் புகார்
போர்நிறுத்த ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகாது: ஈரான்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!
நடிகர் மம்மூட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


