புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

தருமபுரி பிஎஸ்என்எல் சார்பில் இலவச தொழில்நுட்பப் பயிற்சி

தருமபுரி பி.எஸ்.என்.எல். சார்பில் இலவச தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படுவதாக அதன் மாவட்ட முதன்மை பொதுமேலாளர் கே.வெங்கடராமன் தெரிவித்தார்.

Updated On :3 செப்டம்பர் 2018, 4:05 am

தருமபுரி பி.எஸ்.என்.எல். சார்பில் இலவச தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படுவதாக அதன் மாவட்ட முதன்மை பொதுமேலாளர் கே.வெங்கடராமன் தெரிவித்தார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனம் இணைந்து இலவச தொழில்நுட்பப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. 10-ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை கல்வி தகுதி உள்ளவர்கள் இப் பயிற்சியில் சேரலாம். இப்பயிற்சி பெற விரும்புவோர் h‌t‌t‌p://‌r‌g‌m‌t‌t​c.​b‌s‌n‌l.​c‌o.‌i‌n/‌j‌o​b‌p‌o‌r‌t​a‌ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும், பயிற்சி பெறுவோருக்கு நாளொன்றுக்கு ரூ.100 போக்குவரத்துப்படி வழங்கப்படும். பயிற்சி பெற இணயத்தில் பதிவு செய்தவர்கள் தங்களது ஆவணங்களுடன் வருகிற செப்.5-ஆம் தேதி தருமபுரி பாரதிபுரத்தில் உள்ள தொலைத்தொடர்பு பொதுமேலாளர் அலுவலகத்துக்கு நேரில் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.