மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

கிராம சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்

அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் பழுதான கிராம சாலைகளை சீரமைக்க வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.

Published On :

அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் பழுதான கிராம சாலைகளை சீரமைக்க வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.
அரூரில் அந்த சங்கத்தின் 3-ஆவது வட்ட மாநாடு வட்டத் தலைவர் பி.வி.மாது தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் எச்.தொட்டம்பட்டி, மோப்பிரிப்பட்டி, கம்மாளம்பட்டி, கோபிநாதம்பட்டி உள்ளிட்ட கிராம சாலைகள் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் உள்ளன. எனவே, பழுதான இந்த கிராம சாலைகளை சீரமைக்க வேண்டும்.
அரூர் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். டி.ஆண்டியூரில் இருளர், ஜடையம்பட்டியில் அருந்ததியர் சமூக மக்களுக்கு ஏற்பட்டுள்ள வழிப் பிரச்னையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப் பகுதிகளில் பழுதாகியுள்ள தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டு நிலமற்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அரூர் வட்டத் தலைவராக கே.என்.ஏழுமலை, வட்டச் செயலராக பி.வி.மாது, பொருளாளராக பி.சங்கு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், மாவட்டத் தலைவர் டி.எஸ்.ராமச்சந்திரன், மாவட்டச் செயலர் டி.மாதையன், ஒன்றிய செயலர் ஆர்.மல்லிகா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.