மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஜன.29-இல் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி தொடக்கம்

மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் வருகிற ஜன.29 தொடங்கி முதல் 31 ஆம் தேதி வரை

Updated On :24 ஜனவரி 2019, 2:35 am IST

மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் வருகிற ஜன.29 தொடங்கி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது குறித்து, தருமபுரி மாவட்ட விளையாட்டு அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், நிகழாண்டுக்கான மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் ஜனவரி 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தடகளம், நீச்சல் கூடைப்பந்து, வாலிபால், கபடி, ஜிம்னாஸ்டிக்ஸ், பளு தூக்குதல், பூப்பந்து மற்றும் மேசைப்பந்து ஆகிய விளையாட்டுகள் நடத்தப்படும். போட்டியில் கலந்து கொள்பவர்கள் 2018, டிச.31 ஆம் தேதி அன்று 21 வயதிற்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். இதற்கான சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் நீச்சல் போட்டிகளில் முதலிடம் பெறுபவர்கள் மற்றும் குழு போட்டிகளில் தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப் பெற்ற அணியினர் மாநில போட்டிக்கு அரசு செலவில் அழைத்து செல்லப்படுவர்.
போட்டிகளில் கலந்து கொள்வோர் தமிழகத்தில் குறைந்தது 5 ஆண்டுகளாவது வசித்து வருவதற்கான புகைப்படம் ஒட்டிய சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். 
மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறுவோருக்கு ரூ. 1,000, இரண்டாமிடம் பெறுவோருக்கு ரூ. 750, மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு ரூ. 500 பரிசுத்தொகை வழங்கப்படும். முதல் நாளில் ஜனவரி 29 ஆம் தேதி அன்று தடகளம், நீச்சல், மேசைப்பந்து, பளுதூக்குதல், ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளும் நடைபெறும். நீச்சல் போட்டி  ராஜாஜி நீச்சல் குளத்தில் நடைபெறும். மேலும், 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மாவட்ட விளையாட்டரங்கத்தில் கபடி, கூடைப்பந்து, வாலிபால், கைப்பந்து, பூப்பந்து போட்டிகளும் நடைபெறும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் முதல்வர் அல்லது தலைமை ஆசிரியரிடமிருந்து ஆளறிச்சான்றிதழ் கட்டாயமாகப் பெற்று வருதல் வேண்டும்.  எனவே, தருமபுரி மாவட்டத்திலுள்ள 21 வயதிற்குள்பட்ட வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்று தங்களது விளையாட்டுத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.