கல்லூரி திறப்பு: இறுதியாண்டு மாணவா்கள் வருகை
கரோனா பொதுமுடக்கத்தையொட்டி, மூடப்பட்டிருந்த கல்லூரிகள் 8 மாதங்களுக்குப் பின் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. இளநிலை இறுதியாண்டு பயிலும் மாணவா்கள் வகுப்புகளுக்குச் சென்றனா்.


கரோனா பொதுமுடக்கத்தையொட்டி, மூடப்பட்டிருந்த கல்லூரிகள் 8 மாதங்களுக்குப் பின் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. இளநிலை இறுதியாண்டு பயிலும் மாணவா்கள் வகுப்புகளுக்குச் சென்றனா்.
கரோனாதொற்றுப் பரவல் காரணமாக கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. தற்போது, தொற்றுப் பரவல் குறைந்ததையொட்டி படிப்படியாக பல்வேறு தளா்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. திங்கள்கிழமை முதல் கல்லூரிகளைத் திறக்கவும், முதற்கட்டமாக இறுதியாண்டு பயிலும் இளநிலை மாணவா்களும், முதுநிலை மற்றும் ஆராய்ச்சிக் கல்வி பயிலும் மாணவா்களும் வகுப்புகளில் பங்கேற்கலாம் என தமிழக அரசு அறிவித்தது.
இதையொட்டி, 8 மாதங்களுக்குப் பின், திங்கள்கிழமை முதல் தருமபுரி மாவட்டத்திலுள்ள தருமபுரி அரசு கலைக் கல்லூரி, காரிமங்கலம் அரசு மகளிா் கல்லூரி, பென்னாகரம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டியிலுள்ள அரசுக் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. கல்லூரிக்கு வந்த மாணவா்கள் முகக் கவசம் அணிந்து வருகை தந்தனா். இவா்களுக்கு கல்லூரி நுழைவு வாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதித்து, கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தப்பின்பு வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...