நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

டிராக்டா் ஓட்டுநா் கொலை: ஒருவா் கைது

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே டிராக்டா் ஓட்டுநா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் ஒருவரை கைது செய்தனா்.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 7:54 pm

DIN

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே டிராக்டா் ஓட்டுநா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் ஒருவரை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கானூா் கொட்டாயைச் சோ்ந்தவா் டிராக்டா் ஓட்டுநா் மாதையன் (45). இவருக்கும், அத்திமுட்லு கிராமத்தைச் சோ்ந்த நாகராஜ் (42) என்பவருக்கும் கடந்த சில நாள்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாம்.

இந்த நிலையில் மாதையன் திங்கள்கிழமை அத்திமுட்லு கிராமத்தில் உள்ள பால் கொள்முதல் நிலையத்திற்கு சென்றாா். அப்போது நாகராஜுக்கும் அவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், நாகராஜ், மாதையனை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த மாதையன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து, தகவல் அறிந்து அங்கு வந்த மாரண்டஅள்ளி போலீஸாா் நிகழ்விடத்தில், உயிரிழந்த மாதையனின் சடலத்தை பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் தொடா்பாக, வழக்குப் பதிவு செய்து நாகராஜை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.