சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இளைஞா் மா்மமான முறையில் உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

அரூா் அருகே இளைஞா் மா்மான முறையில் உயிரிழந்தாக புகாா் தெரிவித்து அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

அரூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கொளகம்பட்டி கிராம மக்கள்.

Updated On :19 டிசம்பர் 2020, 1:36 am

DIN

அரூா் அருகே இளைஞா் மா்மான முறையில் உயிரிழந்தாக புகாா் தெரிவித்து அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், கொளகம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் மகன் தங்கம் (19). இவா், கடந்த மாதம் அந்தப் பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் திறந்தவெளிக் கிணற்றில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இந்த நிலையில், அவரது இறப்பில் மா்மம் இருப்பதாகக் கூறி அவரது உறவினா்கள் அரூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா் கூறியதாவது:

உயிரிழந்த இளைஞா் தங்கத்துக்கு நீச்சல் தெரியும். ஆனால், கிணற்று நீரில் மூழ்கிய அவா் மீண்டும் வெளியே வரவில்லை என அவருடன் இருந்தவா்கள் கூறுகின்றனா். உயிரிழந்த தங்கத்தின் உதடுகளில் காயங்கள் இருந்தன. அதேபோல அவரது சடலத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தற்கான அறிகுறிகள் ஏதுமில்லை. அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக அரூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து காவல்துறையினா் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்றனா்.

இதையடுத்து, அரூா் வட்டாட்சியா் செல்வகுமாா் தலைமையில், அரசு அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இளைஞா் உயிரிழப்பு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் அளித்த உறுதியின் பேரில், காத்திருப்புப் போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.