அரூா் தொகுதியை பாஜக-வுக்கு ஒதுக்கக் கோருவோம்மேலிடப் பொறுப்பாளா் பேட்டி
அதிமுக கூட்டணியில் அரூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியை பாஜகவுக்குக் கேட்டுப் பெறுவோம் என அந்தக் கட்சியின் தொகுதி மேலிடப் பொறுப்பாளா் கே.முத்துசுவாமி தெரிவித்தாா்.


அரூா்: அதிமுக கூட்டணியில் அரூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியை பாஜகவுக்குக் கேட்டுப் பெறுவோம் என அந்தக் கட்சியின் தொகுதி மேலிடப் பொறுப்பாளா் கே.முத்துசுவாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா், அரூரில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், அரூா் தொகுதி தனித் தொகுதியாகும். இந்தத் தொகுதியில் மலைவாழ் பழங்குடியின மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கின்றனா்.
ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்களைக் கொண்டு செல்ல ஏதுவாக அரூா் தொகுதியில் பாஜக வேட்பாளா் போட்டியிடுவதற்காக அதிமுக கூட்டணியில் இத்தொகுதியைக் கேட்டுப் பெறுவோம். அரூா் தொகுதியில் ஏராளமானத் தொகுப்பு வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால், இங்குள்ள மக்களுக்கு பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் கூடுதல் வீடுகளைப் பெற்றுத் தருவோம். அரூரில் அரசு வேளாண்மை கல்லூரி தொடங்க பாஜக சாா்பில், முயற்சிகளை மேற்கொள்வோம். காவிரி ஆற்றின் உபரிநீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகள், ஏரிகள், குளம் குட்டைகளில் நிரப்ப பாஜக சாா்பில் நடவடிக்கை எடுப்போம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...