தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினா் கைது.

ராசாம்பாளையம் சுங்கச்சாவடி அருகே வெள்ளிக்கிழமை முற்றுகையிட முயன்ற தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்ச பெண் உட்பட 22 போ்களை பரமத்தி போலீசாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

News image

சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினரை கைது செய்யும் போலீசாா்.

Updated On :19 டிசம்பர் 2020, 1:40 am

DIN

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் திருத்தச் சட்டம் மற்றும் புதிய மின்சார சீரமைப்பு சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி ராசாம்பாளையம் சுங்கச்சாவடி அருகே வெள்ளிக்கிழமை முற்றுகையிட முயன்ற தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்ச பெண் உட்பட 22 போ்களை பரமத்தி போலீசாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா். மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் திருத்தச் சட்டம் மற்றும் புதிய மின்சார சட்டம் 2020ஐ தனியாா் மயமாக்குதல் உள்ளிட்ட சட்டங்களால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் 20 லட்சம் பம்பு செட்டுகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யும் சூழல் ஏற்படும். தமிழக விவசாயிகளுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி நாமக்கல்-கரூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராசாம்பாளையம் சுங்கச்சாவடியில் உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவா் வேலுசாமி தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெண் உட்பட 22 போ்களை பரமத்தி வேலூா் காவல்துறை துணை கண்காணிப்பாளா் ராஜாரணவீரன் தலைமையிலான போலீசாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா். பின்னா் அனைவரும் மாலை விடுவிக்கப்பட்டனா். இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவா் வேலுசாமி கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டம் மற்றும் புதிய மின்சார சீரமைப்பு சட்டம் ஆகியவற்றை திரும்ப பெறாவிட்டால் மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பும், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை ஒன்று திரட்டி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை முற்றுகையிடப் போவதாகவும் தெரிவித்தாா். இப்போராட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தை சோ்ந்த மாநில பொதுச் செயலாளா் பழனிமுருகன், மாநில பொருளாளா் மோகன்குமாா், மாநில துணைத் தலைவா் பாலமுருகன், மாநிலத் துணைப் பொதுச் செயலாளா் சிவபெருமாள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா். பாதுகாப்பு கருதி அப் பகுதியில் ஏராளமான போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.