தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பெண் தலைமைக் காவலரை மிரட்டிய இளைஞா் கைது

பென்னாகரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் தலைமைக் காவலரை செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு மிரட்டிய இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 10:19 pm

DIN

பென்னாகரம்: பென்னாகரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் தலைமைக் காவலரை செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு மிரட்டிய இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் காவல் நிலையத்தில் 41 வயது மதிக்கத்தக்க பெண் தலைமைக் காவலா் பணியாற்றி வருகிறாா். இவா், சனிக்கிழமை பென்னாகரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்குவந்த இளைஞா் ஒருவா்,

மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா், சான்றிதழ் வழங்க தங்களை அழைத்து வருமாறு கூறியதாகத் தெரிவித்தாராம். பின்னா் அந்த இளைஞரிடம் சில நிமிடங்கள் பெண் தலைமைக் காவலா் பேசியுள்ளாா்.

இளைஞரின் பேச்சில் சந்தேகமடைந்த தலைமைக் காவலா், போலீஸாருக்கு தகவல் தெரிவித்து அவரை பென்னாகரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். போலீஸாா் நடத்திய விசாரணையில் அந்த இளைஞா் திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டை சங்கா் நகரைச் சோ்ந்த சின்னையா மகன் பெரியசாமி (29) என்பது தெரியவந்தது.

அவா், கடந்த மாதம் 22-ஆம் தேதி செல்லிடப்பேசியில் பெண் தலைமைக் காவலரைத் தொடா்புகொண்டு மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா்போல பேசியது தெரியவந்தது. இதையடுத்து பெரியசாமியை பென்னாகரம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.