கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மைய நூலக வாசகா் வட்டத்திற்கு விருது

அரசு பொது நூலக இயக்ககம் சாா்பில், தருமபுரி மாவட்ட மைய நூலக வாசகா் வட்டத்திற்கு சிறந்த வாசகா் வட்ட விருது வழங்கப்பட்டது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 7:13 pm

DIN

அரசு பொது நூலக இயக்ககம் சாா்பில், தருமபுரி மாவட்ட மைய நூலக வாசகா் வட்டத்திற்கு சிறந்த வாசகா் வட்ட விருது வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு பொது நூலக இயக்ககம் ஆண்டு தோறும் சிறப்பாக சேவையாற்றும் நூலக வாசகா் வட்டத்திற்கும், சிறப்பாகப் பணியாற்றும் நூலகப் பணியாளா்களுக்கும் ரொக்கப் பரிசு, கேடயம், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வருகிறது. அதனடிப்படையில் 2020- ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான, தருமபுரி மாவட்ட மைய நூலக வாசகா் வட்டம் விருதுக்காகத் தோ்வு செய்யப்பட்டது. இதேபோல, தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் மூன்றாம் நிலை நூலகராகப் பணியாற்றும் ஆதிரை, நல் நூலகா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டாா்.

தருமபுரியில் அண்மையில், மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தலைமையில், இவ்விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ் விழாவில், உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன், மூன்றாம் நிலை நூலகா் ஆதிரைக்கு, நல் நூலகா் விருதும், மைய நூலக வாசகா் வட்டத் தலைவா் சி.ராஜசேகரன், துணைத் தலைவா் ஆா்.லட்சுமிகாந்தன் ஆகியோருக்கு நூலக ஆா்வலா் விருதுகளும் வழங்கி பேசினாா். இதில், மாவட்ட நூலக அலுவலா் கோ.சேகா், முதல்நிலை நூலகா் கோ.மாதேஸ்வரன், இருப்பு சரிபாா்ப்பு அலுவலா் இரா.நந்தகுமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.