பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கிணற்றில் விழுந்த காட்டெருமை மீட்பு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் விழுந்த காட்டெருமையை வனத்துறையினர் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.

News image
பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள தமானிக்கோம்பையில் மீட்கப்பட்ட காட்டெருமைக்கு மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினர்.
Updated On :22 டிசம்பர் 2020, 1:40 pm

DIN

அரூர்: பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் விழுந்த காட்டெருமையை வனத்துறையினர் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள தமானிக்கோம்பை எனுமிடத்தில் விவசாய நிலப் பகுதிக்கு வந்த ஒரு காட்டெருமை அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் வீரர்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது காட்டெருமையை கிணற்றில் இருந்து மீட்க முடியாததால், கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் காட்டெருமைக்கு மயக்க மருந்து செலுத்தி, பிறகு கிரேன் மூலம் காட்டெருமையை மீட்டனர். மீட்கப்பட்ட சுமார் 4 வயதுடைய ஆண் காட்டெருமைக்கு மருத்துவ சிகிச்சை அளித்து, அந்த காட்டெருமையை பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.