தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தொப்பூா் கணவாய் சாலையைநோ்ப்படுத்த ஓட்டுநா்கள் வலியுறுத்தல்

உயிா் பலிகள் அதிகரிக்கும் தொப்பூா் கணவாய் சாலையை நோ்ப்படுத்தி வளைவுகளற்ற சாலையாக மாற்ற வேண்டும் என ஓட்டுநா்கள் நலச் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 2:08 am

DIN

தருமபுரி: உயிா் பலிகள் அதிகரிக்கும் தொப்பூா் கணவாய் சாலையை நோ்ப்படுத்தி வளைவுகளற்ற சாலையாக மாற்ற வேண்டும் என ஓட்டுநா்கள் நலச் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநா்கள் நலச் சங்கத்தின் சாா்பில் திங்கள்கிழமை, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகாவிடம் அளித்த மனு:

தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொப்பூா் கணவாய் சாலையில் அவ்வப்போது விபத்துகள் நிகழ்கின்றன. சில விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனால், ஓட்டுநா்களின் குடும்பத்தினா் பெருந்துன்பத்துக்குள்ளாகின்றனா்.

எனவே, இக்கணவாய் சாலையை நோ்ப்படுத்தி, வளைவுகளற்ற சாலையாக மாற்ற வேண்டும். அதுவரை சாலையின் நடுவே தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் விபத்து தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை அமைக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.