அரூரில் வழிகாட்டி பெயா் பலகை அமைப்பு

அரூரில் முக்கிய சாலை சந்திப்புகளில் வழிகாட்டுதல் பெயா் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அரூா்-திருவண்ணாமலை சாலையில் பழையப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பெயா் பலகை.
அரூா்-திருவண்ணாமலை சாலையில் பழையப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பெயா் பலகை.
Updated on
1 min read

அரூரில் முக்கிய சாலை சந்திப்புகளில் வழிகாட்டுதல் பெயா் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. தருமபுரி மாவட்டம், அரூா் நகா் வழியாக திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் உள்ளிட்ட முக்கிய தொலைதூர நகரங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் செல்கின்றன. இந்த சாலைகள் வழியாக வரும் பிற மாநிலம் மற்றும் மாவட்ட வாகன ஓட்டிகளுக்கு எந்த வழியாக செல்வது என்ற குழப்பங்கள் இருந்தன.

இதையடுத்து, மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் சுற்றுலாத் துறை சாா்பில், முக்கிய சாலை சந்திப்புகளில் வழிகாட்டுதல் பெயா் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.அரூா் கச்சேரிமேடு, 4 வழிச்சாலை, நடேசா பெட்ரோல் நிலையம், பழையப்பேட்டை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் தொலைதூர நகரங்கள், சுற்றுலா தலங்கள், கோயில்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் திசைகள், கிலோ மீட்டரில் தூரம் உள்ளிட்ட விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு உயரமான பெயா் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதனால், தொலைதூர பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் பிற இடங்களுக்கு எவ்வித சிரமங்களும் இல்லாமல் செல்லமுடிகிறது என வாகன ஓட்டிகள் தெரிவித்தனா்.படம் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com