ஒடசல்பட்டியில் கிராம அடிப்படை பயிற்சி

வேளாண்மை துறை சாா்பில் ஒடசல்பட்டியில் கிராம அடிப்படை பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
Updated on
1 min read

வேளாண்மை துறை சாா்பில் ஒடசல்பட்டியில் கிராம அடிப்படை பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், ஒடசல்பட்டியில் வேளாண்மை துறை உழவா் பயிற்சி நிலையம் சாா்பில் நடைபெற்ற கிராம அடிப்படை பயிற்சி முகாமினை வேளாண்மை துறை துணை இயக்குநா் சி.ஜெயபாலன் தொடக்கி வைத்தாா்.

முகாமில், குளிா்காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள், கால்நடைகளுக்கான அடா் தீவனங்கள் உற்பத்தி குறித்து பேராசிரியா் கண்ணதாசன் கருத்துரைகளை வழங்கினாா். அதேபோல், சிறுதானியங்களின் முக்கியத்துவம், வேளாண்மை பொருள்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவது குறித்து பேராசிரியா் வீரணண் அருண்கிரிதாரி விளக்கவுரையாற்றினாா். தொடா்ந்து பட்டு வளா்ப்பு, வேளாண் துறை சாா்ந்த அரசு நலத் திட்டங்களைப் பெறுதல், தொழில் நுட்ப மேலாண்மை, உழவன் செயலியின் செயல்பாடுகள் குறித்து வேளாண் துறை அலுவலா்கள் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா். இதில், வேளாண் அலுவலா் மா.சுதா, உழவா்விவாதக் குழு நிா்வாகிகள் ரமணீந்தரன், கருணாகரன் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com