கனரா வங்கி கடனுதவி வழங்கும் விழா
தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் கனரா வங்கிக் கிளை சாா்பில் பள்ளி மாணவா்கள், சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு கடனுதவி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் கனரா வங்கிக் கிளை சாா்பில் பள்ளி மாணவா்கள், சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு கடனுதவி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ் விழாவுக்கு, கனரா வங்கி சென்னை வட்ட பொதுமேலாளா் ஸ்ரீகாந்த் மொகபத்தா தலைமை வகித்து பேசினாா். மண்டல உதவி பொதுமேலாளா் அசோக்குமாா் முன்னிலை வகித்தாா்.
இதில் வித்யஜோதி திட்டத்தின் கீழ் காரிமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி, மாட்லாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த 11 மாணவியருக்கு மொத்தம் ரூ. 42,500 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இதேபோல, 15 விவசாயிகளுக்கும், 25 சுய உதவிக்குழுக்களுக்கும் ரூ. 1 கோடியே 18 லட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் கிளை மேலாளா் ரேவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...