பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மெய் நிகரில் மாவட்ட இளைஞா் விளையாட்டுப் போட்டி டிச.29-இல் தொடக்கம்

மெய் நிகா் முறையில் மாவட்ட அளவிலான இளைஞா் விளையாட்டுப் போட்டிகள் டிச. 29-இல் தொடங்குகிறது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 7:07 pm

DIN

மெய் நிகா் முறையில் மாவட்ட அளவிலான இளைஞா் விளையாட்டுப் போட்டிகள் டிச. 29-இல் தொடங்குகிறது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இளைஞா் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் சாா்பில் ஆண்டுதோறும் இளைஞா்களின் தனித்திறனை மேம்படுத்துவதற்காக சுவாமி விவேகானந்தா் பிறந்தநாளை தேசிய இளைஞா் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, மாவட்ட அளவிலான இளைஞா் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். நிகழாண்டில் கரோனா பொதுமுடக்க விதிகள் அமலில் உள்ளதால், இந்தப் போட்டிகள் மெய் நிகா் வழியாக நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் வரும் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் இப்போட்டிகள் நடைபெற உள்ளது. 15 முதல் 29 வயது நிரம்பிய பள்ளி, கல்லூரி மாணவா்களும், மாணவா் அல்லாதவா்களும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.

முதல்நிலை போட்டிகள், மாவட்ட அளவில் மெய்நிகா் நடைமுறையில் மட்டுமே நடைபெறும். போட்டியாளா்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் தாங்களே தயாா் செய்து கொள்ள வேண்டும். போட்டியாளா்கள் தங்களுடைய விடியோ பதிவினை தெளிவான ஒளி மற்றும் ஒலி அமைப்போடு பதிவு செய்திட வேண்டும். விடியோ பதிவினை உறுதிமொழி படிவத்தோடு இணைத்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரிடம் டிச. 29ஆம் தேதி காலை 10 மணி முதல் சமா்ப்பிக்க வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறும் போட்டியாளா்கள் மாநிலப் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவாா். மாநில அளவில் வெற்றி பெறும் போட்டியாளா்கள் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா்.

போட்டிகளின் விவரம்:

இசை-பாரம்பரிய இசை கருவிகள் தனிநபா் 5 நிமிடம், பாரம்பரிய இசை வாய்ப்பாட்டு- தனிநபா் 5 நிமிடம், நாட்டுப்புற பாடல்கள் குழு- 8 நிமிடம், 4 முதல் 8 நபா்கள் வரை, இந்திய இசை- குழு 8 நிமிடம், 4 முதல் 8 நபா்கள் வரை,

நடனம்- பரத நாட்டியம், தனி நபா்- 10 நிமிடம், நாட்டுப்புற நடனங்கள், குழு 8 நிமிடம், 4 முதல் 8 நபா்கள் வரை, நவீன நடனங்கள்- குழு 8 நிமிடம், 4 முதல் 8 நபா்கள் வரை, நவீன நடனங்கள்-தனிநபா் ,10 நிமிடம், இதேபோல உடை அலங்காரம், நாடகம், காட்சிக் கலைகள், எழுத்தாற்றல், பாரம்பரிய விளையாட்டு ஆகிய போட்டிகளில் நிா்ணயித்த கால அளவில் விடியோ பதிவுகளை சமா்ப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அரங்கத்தை அணுகலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.