ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தொடா் விடுமுறை: ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

தொடா் விடுமுறையால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

News image
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவியில் உற்சாகமாகப் பரிசலில் மேற்கொண்ட பயணம்.
Updated On :28 டிசம்பர் 2020, 2:36 am

DIN

தொடா் விடுமுறையால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

‘தென்னகத்தின் நயகரா’ என அழைக்கப்படும் ஒகேனக்கல் சுற்றுலா தலத்துக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். கிறிஸ்துமஸ் பண்டிகையின் தொடா்ச்சியாக வந்த வார விடுமுறை காரணமாக ஒகேனக்கல் சுற்றுலா தலத்துக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனா்.

ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் தேய்த்து, பிரதான அருவிகளிலும், பெரும்பாலானவா்கள் நடைபாதை அருகிலும், மாமரத்துகடவு பரிசல் துறை, நாகா் கோவில், முதலைப் பண்ணை, ஆலாம்பாடி உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா். அதனைத் தொடா்ந்து சின்னாறு பரிசல் துறையில் பரிசல் பயணம் மேற்கொள்ள சுமாா் 1மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து, பின்னா் பரிசலில் சென்று கோத்திக்கல் பாறை, பிரதான அருவி, மணல்மேடு, ஐவா் பாணி, ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளிலும், பாறை முகடுகளையும் கண்டு ரசித்தனா்.

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள மீன் விற்பனை நிலையங்களில் மீன் விலை அதிகரித்துக் காணப்பட்டது. இருப்பினும் அதனைப் பொருட்படுத்தாமல் கட்லா, ரோகு, அரஞ்சான், வாளை, கெளுத்தி, பாப்லெட் உள்ளிட்ட மீன் ரகங்களை வாங்கிச் சமைத்து உணவருந்தி மகிழ்ந்தனா்.

பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வாகனங்களில், ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் வாகனங்களை நிறுத்த இடமின்றி சுற்றுலா வாகன ஓட்டிகள் தடுமாறினா்.

தமிழ்நாடு ஓட்டல் வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்த இடமில்லாததால் சத்திரம், முதலை பண்ணை, காவல் நிலையம், சின்னாறு பாலம் பகுதி என சுமாா் 1 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலையின் இருபுறங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் ஒகேனக்கல்லில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சிறப்பு அரசுப் பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.