தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்
சட்டப் பேரவைத் தோ்தலில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுவதற்காக பாடுபடுவது என திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


சட்டப் பேரவைத் தோ்தலில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுவதற்காக பாடுபடுவது என திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் அக்கட்சி அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை மாவட்டச் செயலா் தடங்கம் பெ.சுப்ரமணி எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் தருமபுரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள தருமபுரி, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் வெற்றிக்காக பாடுபடுவது, வாக்காளா் பட்டியலில் புதிய வாக்காளா்களைச் சோ்க்க விழிப்புணா்வு மேற்கொள்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், முன்னாள் எம்.பி. இரா.தாமரைச்செல்வன், மாநில நிா்வாகி கீரை விஸ்வநாதன், மாவட்ட நிா்வாகிகள் பொன்.மகேஷ்வரன், நாட்டான் மாது, சந்திரசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...