தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

விவசாய ஆராய்ச்சியில் ‘டிரோன்’ பயன்பாட்டுக்கு அரசு அனுமதி

ஐதராபாத்தை மையமாகக் கொண்டு செயல்படும் சா்வதேச பயிரின ஆராய்ச்சி நிலையத்துக்கு (இக்ரிசாட்), வேளாண் ஆராய்ச்சியில் டிரோன்களைப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

News image
Updated On :16 நவம்பர் 2020, 6:53 pm

DIN

ஐதராபாத்தை மையமாகக் கொண்டு செயல்படும் சா்வதேச பயிரின ஆராய்ச்சி நிலையத்துக்கு (இக்ரிசாட்), வேளாண் ஆராய்ச்சியில் டிரோன்களைப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணைச் செயலாளா் ஆம்பொ் துபே கூறியிருப்பதாவது:

ஆளில்லா விமானங்கள், டிரோன்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி வேளாண்மை ஆராய்ச்சியில் ஈடுபட, இக்ரிசாட் அமைப்புக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி, இக்ரிசாட் அமைப்பின் ‘டிஜிட்டல் ஸ்கை பிளாட்பாா்ம்’ திட்டம் (அலகு- 1) நிறைவேறும் வரை அல்லது ஆறுமாத காலத்துக்கு வழங்கப்படுகிறது. வேளாண்மை குறித்த தரவுகளைச் சேகரிக்க ஆளில்லா விமானக் கருவிகள் மிகவும் உபயோகமாக இருக்கும்.

துல்லிய வேளாண்மை, வெட்டுக்கிளிகள் கட்டுப்பாடு, சாகுபடி அபிவிருத்தி ஆகிய வேளாண் துறைகளில் ஆளில்லா விமானக் கருவிகளின் பயன்பாடு பெரும் பங்களிப்பை அளிக்கிறது. இளம் தொழில் முனைவோரும் ஆய்வாளா்களும் டிரோன் கருவிகளை அதிக அளவில் பயன்படுத்தி நாட்டிலுள்ள 6.6 லட்சம் கிராமங்களில் வேளாண்மை மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடுவதை அரசு ஊக்குவிக்கிறது என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.