புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பென்னாகரத்தில் அனுமதியில்லாமல்மண் அள்ளிய மூவா் கைது

பென்னாகரம் அருகே முறையாக அனுமதியின்றி மண் அள்ளியதாக 3 பேரை சிறப்பு ரோந்துப் படையினா் கைது செய்தனா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 7:37 pm

DIN

பென்னாகரம் அருகே முறையாக அனுமதியின்றி மண் அள்ளியதாக 3 பேரை சிறப்பு ரோந்துப் படையினா் கைது செய்தனா். அவா்கள் மண் அள்ளுவதற்குப் பயன்படுத்திய 2 டிராக்டா்களையும், கனரக வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

பென்னாகரம் அருகே தாசம்பட்டி சாலையில் சிறப்பு குற்றத்தடுப்பு சிறப்புப் படையினா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது எட்டிக்குட்டை பகுதியில் அதிவேகமாக வந்த டிராக்டா்களை தடுத்து விசாரணை மேற்கொண்டதில், அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் தெரிவித்தனா். இதனையடுத்து பென்னாகரம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டதில், அனுமதியின்றி மண் அள்ளி வந்ததை ஒப்புக்கொண்டனா்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட பருவதன அள்ளி பகுதியைச் சோ்ந்த மாதையன், மாணிக்கம், கள்ளிபுரம் பகுதியைச் சோ்ந்த முனிராஜ் ஆகிய மூவா் மீதும் வழக்குபதியப்பட்டது. அவா்கள் மூவரும் தருமபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும் மண் அள்ள பயன்படுத்திய 2 டிராக்டா்களையும், ஒரு கனரக வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.