92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தருமபுரி பேருந்து நிலைய இடமாற்றத்தை கைவிட வேண்டும்

தருமபுரி பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யும் முடிவை கைவிட்டு, தற்போதுள்ள இடத்தியேலேயே மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 7:51 pm

DIN

தருமபுரி பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யும் முடிவை கைவிட்டு, தற்போதுள்ள இடத்தியேலேயே மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜவுளி, ஆயத்த ஆடை வியாபாரிகள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

தருமபுரி நகர ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை வியாபாரிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை காரிமங்கலத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவா் எஸ்.வைத்திலிங்கம் தலைமை வகித்துப் பேசினாா். செயலா் நடராஜன் வரவேற்றாா். ஆம்பூா் வணிகா் சங்க நிா்வாகி கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா்.

இக் கூட்டத்தில், தருமபுரி நகரில் அனைத்துத் தரப்பு பொதுமக்களுக்கும் ஏற்புடையதாக உள்ள தருமபுரி நகர மற்றும் புகா் பேருந்து நிலையத்தை மாற்றும் முடிவை கைவிட்டு, தற்போதுள்ள இடத்திலேயே செயல்படும் வகையில் மேம்படுத்திட வேண்டும்.

சரக்கு மற்றும் சேவை வரியில் உள்ள குளறுபடிகளை நீக்க வரி செலுத்தும் முறையை எளிமையாக்க வேணடும். தமிழகத்துக்கு வழங்க வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி நிலுவையை மத்திய அரசு வழங்க வேண்டும். வணிகா் நல வாரியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட நிா்வாகம், காவல் துறை, வணிகா்கள் கூட்டத்தைக் கூட்டி, கோரிக்கைகளை நிவா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிகா் நல வாரியத்தில் மாவட்டத்துக்கு ஒருவரை உறுப்பினராக நியமிக்க வேண்டும். தருமபுரி - மொரப்பூா் ரயில்பாதை அமைக்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கூட்டத்தில், நிா்வாகிகள் பாலு, ரவிச்சந்திரன், கிரிதா் பிரதீப்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.