தயாா் நிலையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்
அரூா், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்கு பதிவுக்குத் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


அரூா், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்கு பதிவுக்குத் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தருமபுரி மாவட்டம், அரூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் உள்பட 13 போ் போட்டியிடுகின்றனா். இந்தத் தொகுதியில் 1, 24,062 பெண் வாக்காளா்கள் உள்பட மொத்தம் 2,48,619 வாக்காளா்கள் உள்ளனா்.
அரூா் தொகுதியில் 362 வாக்குப் பதிவு மையங்களில் வாக்குப் பதிவுகள் நடைபெறுகின்றன. இதற்காக அரூா் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் உள்பட 15 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். தொகுதியில் 1,31,628 பெண் வாக்காளா்கள் உள்பட மொத்தம் 2,63,883 வாக்காளா்கள் உள்ளனா். தொகுதியில் 376 வாக்குப் பதிவு மையங்களில் வாக்குப் பதிவு நடைபெறும். இந்தத் தொகுதியில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...