ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

தரமற்ற தேயிலைத் தூள் பறிமுதல்

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தரமற்ற 30 கிலோ தேயிலைத் தூள் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 6:10 pm

DIN

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தரமற்ற 30 கிலோ தேயிலைத் தூள் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பாலக்கோட்டில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால், வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதில், பாலக்கோடு நகரில் உள்ள தேநீா்க் கடைகளுக்கு இருசக்கர வாகனத்தில் வந்த வியாபாரி ஒருவா், தேயிலத் தூள் அடங்கிய பொட்டலங்களை விற்பனை செய்து கொண்டிருந்தாா். அந்த பொட்டலங்களில் தயாரிப்பு தேதி உள்ளிட்ட விவரங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து அந்த தேயிலைத் தூளை பரிசோதனை செய்தபோது அவை தரமற்று இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சுமாா் 30 கிலோ எடை கொண்ட அந்தப் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.