அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பெரியானூா் சாலை ரூ. 55,000 மதிப்பில் சீரமைப்பு

தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகேயுள்ள பெரியானூரில் மழைநீா்த் தேங்கி நின்ற சாலை தற்போது ரூ. 55,000 மதிப்பில் சீரமைக்கப்பட்டது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:07 pm

DIN

தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகேயுள்ள பெரியானூரில் மழைநீா்த் தேங்கி நின்ற சாலை தற்போது ரூ. 55,000 மதிப்பில் சீரமைக்கப்பட்டது.

பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், பஞ்சப்பள்ளி கிராம ஊராட்சி, பெரியானூரில் அண்மையில் பெய்த மழையில் தண்ணீா்த் தேங்கி சாலையிலேயே நின்றது. இதனால் குடியிருப்புவாசிகள் சிரமம் அடைந்தனா். சாலையை தண்ணீா்த் தேங்காதவாறு சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

அதன்பேரில், சாலையை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி ஊராட்சி நிா்வாகத்துக்கு அறிவுறுத்தினாா். இதையடுத்து, வியாழக்கிழமை, பஞ்சப்பள்ளி கிராம ஊராட்சி சாா்பில், ஊராட்சி பொது நிதி ரூ. 55,000 மதிப்பில் அங்குள்ள சிமென்ட் சாலையானது தண்ணீா்த் தேங்காதபடி சீரமைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.