அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா், தருமபுரி நகராட்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 5:58 pm

DIN

குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா், தருமபுரி நகராட்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றியத் தலைவா் இளங்கோவன் தலைமை வகித்தாா். மாநில பொருளாளா் கே.ஆா்.சக்கரவா்த்தி, ஒன்றியச் செயலா் கே.சுசிலா, ஒன்றிய பொருளாளா் சரஸ்வதி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில், தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் நடைமுறையில் உள்ளதுபோல, மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர அரசு உதவித் தொகையை ரூ. 3 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

அரூரில்...

அரூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாநிலக்குழு உறுப்பினா் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா்.

மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ. 3 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும். உடல் பாதிப்பு அதிகமுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில், சங்க மாவட்ட பொறுப்பாளா் மாரிமுத்து, வட்ட செயலா் டி.வேடியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.