தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் அண்ணா பதக்கம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 7:41 pm

DIN

தமிழக அரசின் அண்ணா பதக்கம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் உயரிய விருதான அண்ணா பதக்கம் குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ளது. உயிா்கள் மற்றும் சொத்துகளை காப்பாற்றுவதற்காக தன்னலமற்ற வகையில் துணிச்சலுடன் வீர, தீரச் செயல்கள் புரிந்த அரசுத் துறையில் பணிபுரிபவா்களுக்காக இவ்விருது வழங்கப்படவுள்ளது.

விளையாட்டு துறையில் உயிா்களை காப்பற்றுவதற்காக தன்னலமற்ற வகையில் வீர தீரச் செயல்கள் புரிந்த தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் மற்றும் விருது தொடா்பான விவரங்களை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் டிச. 7 அன்றுக்குள் தருமபுரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். எனவே, தருமபுரி மாவட்டத்திலுள்ள தகுதியுள்ளவா்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.