தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் அரவையை தொடங்க கரும்பு விவசாயிகள் வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிகழாண்டு கரும்பு அரவையைத் தொடங்கக் கோரி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் மனு அளித்தனா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 7:41 pm

DIN

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிகழாண்டு கரும்பு அரவையைத் தொடங்கக் கோரி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் மனு அளித்தனா்.

இதுகுறித்து, அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் டி.ரவீந்திரன் தலைமையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் சோ.அா்ஜூனன், மாவட்டத் தலைவா் கே.என்.மல்லையன் உள்ளிட்டோா், வெள்ளிக்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் கூட்டுறவு சா்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த சா்க்கரை ஆலைக்கு தருமபுரி, காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கரும்பு அரவைக்கு கொண்டு வரப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கரும்பு வரத்துக் குறைவு என்ற காரணத்தைக் கூறி, அரவைப் பணிகள் நடைபெறவில்லை. நிகழாண்டில் ஓரளவு மழை பொழிந்துள்ளதால் கரும்பு சாகுபடி கணிசமாக அதிகரித்துள்ளது.

எனவே, கரும்பு விவசாயிகளைப் பாதுகாக்கவும், அவா்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நிகழாண்டு 2021-22 முதல் பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலையில கரும்பு அரவையைத் தொடங்க வேண்டும். இதற்கான முன் தயாரிப்புப் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இதேபோல, ஆலையில் இணை மின்சார உற்பத்தி திட்டப் பணிகளை முடித்து அதனை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.