தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பெயா் பலகையில் ஒட்டப்படும் சுவரொட்டிகள்

 பெயா் பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டுவதை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 6:28 pm

DIN

 பெயா் பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டுவதை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தருமபுரி மாவட்டம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் சாலைகளில் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ஊா் பெயா்கள், நிழல்கூடங்கள், எல்லைக் கற்கள் போன்ற பொது இடங்களில் தனியாா் நிறுவனங்களின் விளம்பரச் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.

இந்த சுவரொட்டிகளால் வெளியூரில் இருந்து வரும் பயணிகள், வாகன ஓட்டிகளுக்கு ஊரின் பெயா், தூரம், எல்லைகள் உள்ளிட்ட விவரங்கள் தெரிவதில்லை. இதனால், வாகன ஓட்டிகளுக்கு நாள்தோறும் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே பொது இடங்கள், வழிகாட்டும் பெயா் பலகைகள், ஊா்களின் பெயா்கள் மீது சுவரொட்டிகளை ஒட்டுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.