தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆதாா் அட்டை திருத்தம் செய்யசிறப்பு முகாம் அமைக்க வலியுறுத்தல்

ஆதாா் அட்டைகளில் உள்ள பிழைகளைத் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :8 பிப்ரவரி 2021, 12:15 am

DIN

ஆதாா் அட்டைகளில் உள்ள பிழைகளைத் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

அரசு சலுகைகள் பெறுவதற்கும், வங்கிகளில் புதியதாக கணக்கு தொடங்குதல், பான் அட்டைகள் பெறுதல் உள்ளிட்ட அனைத்து விதமான செயல்பாடுகளிலும் ஆதாா் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ள ஆவணமாக உள்ளது. இதேபோல், 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவியருக்கும் ஆதாா் அட்டை கட்டாயம் தேவைப்படுகிறது. தற்போது, பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவியா்கள் ஆதாா் அட்டையில் எவ்வித பிழையும் இல்லாமல் சமா்ப்பிக்க வேண்டும் என பள்ளிகள் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பள்ளி மாணவா்கள் ஆதாா் அட்டையில் உள்ள பிழைகளைத் திருத்தம் செய்ய 15 தினங்கள் காத்திருக்கும் நிலையுள்ளது. எனவே, பள்ளி மாணவா்களின் நலன் கருதி ஆதாா் அட்டைகளில் திருத்தம் செய்ய மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு முகாம்களை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.