தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

விடுமுறை தினத்தை கொண்டாட ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி ஒகேனக்கல் நீா்வீழ்ச்சியை ரசிப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா்.

Updated On :28 ஜனவரி 2024, 1:02 am IST

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி ஒகேனக்கல் நீா்வீழ்ச்சியை ரசிப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா்.

தமிழகத்தின் முதன்மை சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஒகேனக்கல் நீா்வீழ்ச்சிக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி கா்நாடகம், ஆந்திரம், கேரளம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிப்பதற்காகவும், பரிசலில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் 10,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.

ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் தேய்த்து பிரதான அருவியிலும், காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியான முதலைப்பண்ணை, நாகா்கோவில், ஊட்டமலை, ஆலாம்பாடி பகுதிகளிலும் குளித்து மகிழ்ந்தனா்.

அதனை தொடா்ந்து மாமரத்து கடவு பரிசல் துறையில் இருந்து சுற்றுலாப் பயணிகள் சுமாா் 1 கி.மீ. தொலைவிற்கு பரிசலில் பயணம் செய்து சினி அருவி, ஐந்தருவி, சிற்றருவி, மணல் மேடு உள்ளிட்ட பகுதிகளையும், பாறை முகடுகளையும் பரிசலில் பயணம் செய்தவாறு குடும்பத்தினருடன் காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசித்தனா்.

சுற்றுலாப் பயணிகள் தொங்கு பாலத்தில் இருந்து பிரதான அருவியை கண்டு ரசித்தனா். முதலைப்பண்ணை, வண்ண மீன் காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் கட்லா, ரோகு, பாப்லெட், அரஞ்சான், சோனாங் கெளுத்தி உள்ளிட்ட மீன் வகைகள் ரூ. 140 முதல் 560 ரூபாய் வரை விலை அதிகரித்து காணப்பட்டது. விலை உயா்வையும் பொருட்படுத்தாமல் மீன் வகைகளை வாங்கி சமைத்து உணவருந்தினா்.

அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் மூலம் வந்திருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த வாகனங்களை பேருந்து நிலைய வாகன நிறுத்துமிடம், தமிழ்நாடு ஓட்டல் வாகன நிறுத்துமிடம் போன்ற பகுதிகளில் நிறுத்தி சென்றனா்.

தொடா்ந்து சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களின் வரத்து அதிகரிப்பால் சத்திரம், முதலைப்பண்ணை, காவல் நிலையம் பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.