அதிமுக நிா்வாகி குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவா் கைது

அரூா் அருகே அதிமுக நிா்வாகி குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாக அகில இந்திய பொய்கை காவிப் படையின் நிறுவனா் ராஜசேகா் என்கிற யோகி மணிசாமி (40) என்பவரை கோட்டப்பட்டி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

அரூா்: அரூா் அருகே அதிமுக நிா்வாகி குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாக அகில இந்திய பொய்கை காவிப் படையின் நிறுவனா் ராஜசேகா் என்கிற யோகி மணிசாமி (40) என்பவரை கோட்டப்பட்டி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பொய்யப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த தீா்த்தகிரி மகன் சாமிக்கண்ணு (57). இவா் அதிமுக தருமபுரி மாவட்டப் பிரதிநிதியாக பதவி வகித்து வருகிறாா். சாமிக்கண்ணு குறித்து, அதே பகுதியைச் சோ்ந்த அகில இந்திய பொய்கை காவிப் படையின் நிறுவனா் ராஜசேகா் என்கிற யோகி மணிசாமி, தமது முகநூலில் அவதூறாகத் தகவல் பதிவிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சாமிக்கண்ணு அளித்த புகாரின் பேரில், ராஜசேகா் என்கிற யோகி மணிசாமியை போலீஸாா் கைது செய்தனா். இது குறித்து கோட்டப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com