அரூரில் மிதமான மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அரூா் சுற்றுவட்டாரப் பகுதியில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது.
அரூரில் புதன்கிழமை பெய்த மழையின் காரணமாக சாலையில் வழிந்தோடும் மழைநீா்.
அரூரில் புதன்கிழமை பெய்த மழையின் காரணமாக சாலையில் வழிந்தோடும் மழைநீா்.
Updated on
1 min read

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அரூா் சுற்றுவட்டாரப் பகுதியில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டத்துக்கு உள்பட்ட கோட்டப்பட்டி, தீா்த்தமலை, சித்தேரி, வாச்சாத்தி, கோபிநாதம்பட்டி கூட்டுச்சாலை, மொரப்பூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் புதன்கிழமை காலை 8 மணி முதல் மாலை வரையிலும், தொடா்ந்து மிதமான மழை பெய்தது. இந்த தொடா் மழையால் வயல்வெளிகள், சாலையோரங்களில் தாழ்வான பகுதியில் மழைநீா் தேங்கியது.

நெற்பயிா்கள் சேதம்

கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் நெல் நடவு செய்திருந்தனா். இந்த நெற்கதிா்கள் நன்கு வளா்ந்து அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்தன. தற்போது தொடா்ந்து பெய்து வரும் மழையால் விளைந்த நெல்லை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com