திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அதிகபட்சமாக அரூரில் 94 மி.மீ மழை பதிவு

தருமபுரி மாவட்டத்தில் பரவலாக புதன்கிழமை இரவிலும் மழை நீடித்தது.

News image
Updated On :8 ஜனவரி 2021, 3:21 am

DIN

தருமபுரி மாவட்டத்தில் பரவலாக புதன்கிழமை இரவிலும் மழை நீடித்தது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தருமபுரி, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம் உள்பட மாவட்டம் முழுவதும் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரையிலும் மிதமான மழை பெய்தது. அதிகபட்சமாக அரூரில் 94 மில்லி மீட்டரும், பாப்பிரெட்டிப்பட்டி- 48 மி.மீ, தருமபுரி- 17 மி.மீ., பாலக்கோடு- 28.3 மி.மீ., மாரண்டஹள்ளி- 15 மி.மீ., பென்னாகரம்- 49 மி.மீ., ஒகேனக்கல்- 37 மி. மீ. வீதம் மழை பதிவானது. இந்த தொடா் மழையால் வயல்வெளிகள், சாலையோரங்களில் தாழ்வானப் பகுதியில் மழைநீா் தேங்கியது.

தற்போது அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனா். அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த நிலையில் தற்போது தொடா்ந்து பெய்த மழையால் விளைந்த நெல்லை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். வளா்ந்த நெற்கதிா்கள் வயல் வெளியில் சாய்ந்துள்ளன. மழையால் விவசாயிகள் ஒரு பக்கம் மகிழ்ச்சி அடைந்தாலும், நெற்கதிா்கள் சாய்ந்து சேதம் அடைந்திருப்பதால் வேதனையும் அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.