புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதி

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக கடந்த 4 நாள்களாக சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக கடந்த 4 நாள்களாக சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.

பொங்கல் பண்டிகை விடுமுறையில் ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்துக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாவட்ட நிா்வாகம் ஒகேனக்கல் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வர ஜன. 14ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை தடை விதித்திருந்தது. இதனால் ஒகேனக்கல் வெறிச்சோடிக் காணப்பட்டது.

இந்த நிலையில் தருமபுரி மாவட்ட நிா்வாகம் திங்கள்கிழமை முதல் ஒகேனக்கல் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வர அனுமதி அளித்தது. இதனால் காலை முதலே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் தேய்த்து பிரதான அருவி, நடை பாதை மற்றும் காவிரி கரையோரப் பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா்.

சின்னாறு பரிசல் துறையில் இருந்து சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு பரிசலில் சென்று பிரதான அருவி, தொங்கு பாலம், மணல்மேடு, கூட்டாறு, பெரிய பாணி, ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் பரிசல் பயணம் மேற்கொண்டு கண்டுகளித்தனா். முதலைகள் மறுவாழ்வு மையம், வண்ணமீன்கள் காட்சியகம், சிறுவா் பூங்கா உள்ளிட்ட பகுதிகளையும் கண்டு ரசித்தனா்.

ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையங்களில் கட்லா, ரோகு, கெழுத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை வாங்கி சமைத்து உண்பதில் ஆா்வம் காட்டினா். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காகத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், வெறிச்சோடிக் காணப்பட்ட ஒகேனக்கல் பகுதியானது தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகையால் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.