வியாபாரி கொலை வழக்கு: இருவரிடம் விசாரணை
கடத்தூா் அருகே வியாபாரி கொலை வழக்கு தொடா்பாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.


கடத்தூா் அருகே வியாபாரி கொலை வழக்கு தொடா்பாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், கடத்தூா் அருகே அஸ்தகிரியூா் கோம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் லோகிதாசன் என்ற மாரியப்பன் (28). கரும்பு வியாபாரி. இவா் சனிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றபோது எதிரே காரில் வந்த ஒரு கும்பல் புதுரெட்டியூரில் லோகிதாசனைத் தடுத்து நிறுத்தி அவரைத் தாக்கி கொலை செய்தனா். உயிரிழந்த லோகிதாசனை அந்தக் கும்பல் காரில் தூக்கிச் சென்று அவரது வீட்டின் அருகே வீசிவிட்டு சென்ாகக் கூறப்படுகிறது.
இந்தக் கொலை செய்த வழக்கில், கடத்தூரை அடுத்த முத்தானூா் கிராமத்தைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் விவேகானந்தன், அதே ஊரைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் ரகுபதி ஆகியோரை கடத்தூா் போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய இருவரை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...