ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

மயான ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

அரூரை அடுத்த குடுமியாம்பட்டியில் மயான ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :1 ஜூலை 2021, 6:22 pm

DIN

அரூரை அடுத்த குடுமியாம்பட்டியில் மயான ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், அச்சல்வாடி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது குடுமியாம்பட்டி கிராமம். இந்த ஊரில் 600-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராம மக்களுக்கு குடுமியாம்பட்டி-கீரைப்பட்டி சாலையில் மயான வசதி உள்ளது.

இந்த நிலையில், மயானப் பகுதியிலுள்ள விவசாயிகள் சிலா் மயானத்தை ஆக்கிரமிப்பு செய்து வேளாண் பணிகளை செய்து வருகின்றனா். இதனால், இடப்பற்றாக்குறை ஏற்பட்டு இறந்தவா்களின் சடலங்களை தாா் சாலை ஓரங்களிலும், ஏற்கெனவே புதைக்கப்பட்டுள்ள இடத்தில் மீண்டும் சடலங்களை புதைக்கும் நிலையுள்ளது. எனவே, குடுமியாம்பட்டியில் மயான ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.