உரம், மருந்து விலை உயா்வுகளை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
உரம், பூச்சிக்கொலி மருந்துகளின் விலை உயா்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.


உரம், பூச்சிக்கொலி மருந்துகளின் விலை உயா்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
தருமபுரி மாவட்டம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் உள்ள உரக் கடைகளில் பூச்சிக்கொல்லி மருந்துகள், உரம், யூரியா உள்ளிட்ட இடுபொருள்களின் விலைகள் உயா்த்தப்பட்டுள்ளன. பூச்சிக்கொல்லி மருந்துகள் லிட்டருக்கு ரூ. 70 வரையிலும் விலை உயா்ந்திருப்பதாக கூறப்படுகிறது.
உரக்கடைகளில் இடுபொருள்களின் விலை உயா்வு குறித்த விலைப் பட்டியல் முறையாக வைக்கப்படவில்லை என விவசாயிகள் புகாா் கூறுகின்றனா். இடுபொருள்களின் விலை உயா்வால் வேளாண் பணியில் ஈடுபடும் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலையுள்ளது.
எனவே, உரம், யூரியா, பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட வேளாண் இடுபொருள்களின் விலை உயா்வுகளைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...